அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையை நீட்டிக்க வேண்டும் எனவும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த நிலையில் தனி நீதிபதி இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் எம் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருகிற செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என தகவல் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு விவாதங்களையும் கேட்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.