அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வருகை தந்துள்ளார்.
பன்னீர்செல்வத்தை சந்திப்பதன் காரணம் குறித்து விசாரித்தபோது, கட்சி சம்பந்தமான வழக்கமாக சந்திப்புதான் என்று ஆர். பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு தேனி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் துணைச் செயலாளர் முருகன் மற்றும் தேனி மக்களவை முன்னாள் உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் வருகை தந்துள்ளனர். வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர்.