Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன், முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு…. திடீர் திருப்பம்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் (எம் பி)முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இருந்தாலும் உண்மையான காரணம் என்னவென்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்த சந்திப்பின்போது, தேனி மக்களவைத் தொகுதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளார். முன்னதாக முதல்வருக்கு ‘ பாரதியார் கவிதைகள்’ புத்தகத்தை பரிசாக அளித்தார்.

அதிமுகவில் முழுமையாக இபிஎஸ் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளதால் மறைமுகமாக ஓபிஎஸ் பணிப்போர் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓபிஎஸ் மகன் திடீரென புதல்வர் ஸ்டாலினை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |