ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி, தமிழக அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் சென்னை உயர் நீதிமற்றத்தை நாட அறிவுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக, மூன்று மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாக தடை இல்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்த வருடமே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.