ஹரி மேகன் தம்பதியினர் தங்களின் திருமணத்திற்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வெளியிட்ட செய்தி உண்மையில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஹரி மேகன் தம்பதியினர் ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டியில் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் மேற்கொண்டதாக கூறியிருந்தனர்.இந்த செய்தி பிரிட்டன் மக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்று நாட்களுக்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்தபின் மக்களின் வரிப்பணம் 32 மில்லியன் பவுண்டுகள் வாங்கி தேவாலயத்தில் திருமணம் செய்தது எதற்கு என்று கேட்டு கடும் ஆத்திரத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சபை தலைவரின் அலுவலகம், வீட்டில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளது.
ஏனென்றால் பிரிட்டனில் ஒரு முறை திருமணம் செய்து கொண்ட பின் மீண்டும் திருமணம் செய்வது மிகவும் சிக்கலானது என்பதால் பாதிரியார் ஒருவர் திருச்சபை தலைவரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார்.அதற்க்கு திருச்சபை தலைவரான ஜஸ்டின் வெல்பி தான் தனிப்பட்ட முறையில் திருமணங்கள் நடத்தி வைப்பது இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஹரி மேகனின் திருமண சான்றிதழ் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் ஹரி மேகன் மே மாதம் 19 ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு விண்ட்சர் மாளிகையில் திருமணம் செய்ததுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமண பதிவு அலுவலகம் முன்னாள் அலுவலரான ஸ்டீபன் போர்ட்டன் மேகனின் திருமணம் மே மாதம் 19ஆம் தேதி தான் நடந்தது என்றும் ஒருவேளை அவர்கள் திருமணத்திற்கு முன்பு ஒத்திகை பார்த்து இருக்கலாம் என்றும் கூறினார்.
தற்போது ஹரி மேகனின் செய்தி தொடர்பாளரான ஒருவர் ஹரி மேகன் மூன்று நாட்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறியது உண்மை இல்லை என்றும் தனிப்பட்ட முறையில் வாக்குறுதிகளை பரிமாறிக் கொண்டார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தி பிரிட்டன் மக்களிடையே மேலும் கோபத்தை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் மேகன் திருமண விஷயத்தை பற்றி சொன்னதை பொய் என்றால் அந்த பேட்டியில் கூறிய மற்ற எல்லா விஷயமும் உண்மையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் .