ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பிறகு ஹரி முதன்முறையாக சகோதரர் மட்டும் தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஹரி- மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான நேர்காணலில் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பெரும் பரபரபு ஏற்பட்டது. இந்த நேர்காணலுக்கு பிறகு ஹரி முதன்முறையாக தொலைபேசியில் தந்தை மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் இந்த உரையாடலில் எவ்வித தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனை குறித்து மேகனின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான கெய்ல் கிங் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியமுடன் இளவரசர் ஹரி நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசியதே மகிழ்ச்சியான தகவல் என்று கூறியுள்ளார்.ஓப்ராவுடனான நேர்காணலில், மேகன் ராஜ குடும்பத்தில் தான் பட்ட கஷ்டத்தை பற்றி கூறினார் . தனக்கு பிறக்கும் குழந்தையின் நிறத்தை பற்றி ஒருவர் கூறியதாகவும் அந்த நேர்காணலில் கூறினார். அதனால் தான் தற்கொலைக்கு தூண்டியதாகவும் கண்கலங்கினார். இதனால் தான் மேகன் குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கு முதன்மையான காரணம் என்றும் அவர் கூறினார்.