Categories
மாநில செய்திகள்

ஓமனில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும்  8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று (5.08.2022) கடிதம்.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடி தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும், தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் மீனவர்களின் அவல நிலையை குறிப்பிட்டு அவர்களை மஸ்கட்டில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Categories

Tech |