ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு தமிழகத்திற்குள் இன்னும் பரவவில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, திருச்சியில் ஓமிக்ரான் உறுதியானதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு ஓமிக்ரான் உள்ளதா என கண்டறிய மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரியின் முடிவு வந்த பிறகு என்ன வகை கொரோனா என்பது தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
Categories