தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு பணியாக பள்ளியில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வந்த தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போதுதான் மீண்டும் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரம் எடுத்து பரவி வருகிறது. இது குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய தடுப்பு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- 1 முதல் 8 வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தப்படலாம்.
- மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது கட்டாயம் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
- அதிக வெப்பநிலை இருக்கும் நபர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
- மாணவர்கள் முக கவசம் அணிந்து இருப்பது கட்டாயம்.
- ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
- மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உறுதி, கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க இறைவணக்கம் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்க வேண்டும்.
- பள்ளிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக மூட வேண்டும்.
- அரசு வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.