இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.அம்மாக்கள் செய்யும் தியாகங்களை நெகிழ்வுடன் நினைவு கூறும் நாம் பல நேரங்களில் நம் அப்பாக்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. தாய் தனது பிள்ளையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறார் என்றால் தந்தை தம் பிள்ளைகளை வாழ்நாள் முழுவதும் தன் தோளில் சுமக்கிறார். குடும்பத்திற்காக பம்பரமாய் சுழன்று ஒரு ஆணி வேராக திகழ்பவர் தந்தை.
இலைகளையும், கிளைகளையும், கனிகளையும் கவனித்து பழகிய நமக்கு பூமிக்கடியில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் வேர்களை தெரியாது. குடும்பத்திற்காக தன் உழைப்பை,யாகத்தை வழங்கிவிட்டு ஆசைகளையும் கண்ணீரையும் மறைத்து வாழ்பவர் தான் தந்தை.தன் குழந்தைகளை தோள் மீது தூக்கி வைத்து தான் காண முடியாத உயரத்தை உலகத்தை அவர்களுக்கு காட்டுவார் அப்பா. அவரை இன்று ஒருநாளாவது நினைவுகூர்ந்து கூறுவோம், இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா.