Categories
தேசிய செய்திகள்

ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை… ப்ரைவசியில் மாற்றம் இல்லை என அறிவிப்பு?…!!!

வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் சிக்னல் செயலியை நோக்கி படையெடுக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனியுரிமைக் கொள்கை, நிபந்தனைகளைப் புதுப்பித்து, அதனை ஏற்றுக்கொள்வதற்கு பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் வழங்கியது. அந்த பிரைவசி கொள்கைகள் அனைத்தும் பயனர்களின் தரவுகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் விதமாக இருந்ததாக புகார்கள் வந்தன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக்தடைசெய்யப்பட வேண்டும் என குரல்கள் எழும் அளவுக்கு பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது.

இதனால் வாட்ஸ்அப்புக்கு மாற்றான செயலியை வாடிக்கையாளர்கள் தேடத்தொடங்கினர். இதனிடையே சிக்னல் செயலியைப் பயன்படுத்துமாறு எலான் மஸ்க் தெரிவித்தால், பெரும்பாலானோர் சிக்னல் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் சிக்னல் ஆப் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தது.

இதைத்தொடர்ந்து வாட்ஸ்அப், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனுப்பப்படும் மெசேஜ்களின் ப்ரைவஸி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. மாறாக பிசினஸ் கணக்குகளுடன் நடக்கும் உரையாடல் குறித்தே புதிய கொள்கைகள் பேசுகின்றன என்றது வாட்ஸ்அப். புதிய ப்ரைவசி கொள்கை பற்றி அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களை விளக்க பிரத்யேக பக்கம் ஒன்றையும் தயார் செய்திருந்தது வாட்ஸ்அப்.

அதோடு செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தது. இருந்தும் வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவசி கொள்கைகள் குறித்த சந்தேகப் பார்வை போனதாக இல்லை. குழப்பங்கள் கலைந்தபாடில்லை. இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் பிரைவசி குறித்து தவறான, குழப்பான தகவல்கள் பரபரப்பப்படுவதாகவும், அந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் நாங்கள் உங்கள் உதவுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பிரைவசி கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட கால அவகாசத்தை மே 15 வரை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. பிசினஸ் கணக்குகளுடன் பயனர்கள் செய்யும் உரையாடல்கள் ஃபேஸ்புக் சர்வர்களில்தான் சேகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதைத்தான் ஃபேஸ்புக்குடன் பகிரப்போகிறது வாட்ஸ்அப். இது விளம்பரங்கள் காட்டப் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. புதிய பிசினஸ் வசதிகளையும் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது வாட்ஸ்அப். அதற்காகத்தான் அவசர அவசரமாக அதன் பிரைவசி கொள்கைகளை மாற்ற முயற்சி செய்துவருகிறது என தெரிகிறத்.

Categories

Tech |