நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) என்பது அரசு ஓய்வூதியத்திட்டம் ஆகும். இது ஈக்விட்டி மற்றும் கடன் கருவிகள் (டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்) இரண்டையும் கொண்டு இருக்கிறது. NPSக்கு அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் கிடைக்கிறது. ஓய்வுக்குப் பின் அதிகமான மாதாந்திர ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கு தாங்கள் NPS-திட்டத்தில் முதலீடுசெய்யலாம்.
என்பிஎஸ்-ல் 40 வருடங்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால், உங்களுக்கு 1.91 கோடி கிடைக்கும். அதற்குப்பின் முதிர்வுத் தொகையின் முதலீட்டில் ரூ.2 லட்சம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். இதன்கீழ் சிஸ்டமிக் வித்டிராயல் பிளான் (எஸ்டபிள்யூபி) வாயிலாக ரூபாய். 1.43 லட்சம் மற்றும் ரூபாய்.63,768 -க்கான மாதாந்திர வருவாயும் கிடைக்கும். இவற்றில் முதலீட்டாளர் உயிருடன் இருக்கும்வரை ஆண்டுத் தொகையிலிருந்து ரூபாய்.63,768 மாத ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும்.