ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரசு பணியில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துறை அதிகாரிகள், துறை உதவி அதிகாரிகள் தகுதிக்கு ஏற்ப காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடம் அல்லது திட்ட முடியும் வரை பணியாற்றலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்கவும் நிராகரிக்கவும் அமைச்சகத்திற்கு முழு அதிகாரம் உண்டு. இதற்கான விண்ணப்பங்களை நிரப்பி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றும், மேற்கொண்ட தேதிக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அரசு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.