Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர் கழுத்து அறுத்து படுகொலை …!!

புதுச்சேரியில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ஓய்வுபெற்ற ஜிம்மர் ஊழியரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் காக்கையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயதாகும்  சுப்பிரமணி என்பவர் ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றினர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சுப்பிரமணியன் வீட்டில் ஏற்கனவே பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் பணத்திற்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |