இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவை சேர்ந்த ராஜீவ் ராமுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் களமிறங்கினார். அதில் சானியா மிர்சா தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இந்த ஆண்டில் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா ( வயது 35 ), “தனது ஓய்வு முடிவை அவசர கதியில் அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஓய்வை பற்றி யோசிக்கவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்பேன். ஓய்வு பற்றிய சிந்தனை என் மனதில் தொடர்ந்து இருந்ததில்லை. இந்த ஆண்டு இறுதியில் என்ன நடக்கும் என்பதை பற்றி உண்மையில் நான் சிந்திக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.