Categories
தேசிய செய்திகள்

“ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு செம சூப்பர் நியூஸ்…!!” மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.…!!

அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது . இந்த ஓய்வூதிய தொகை தபால் நிலையங்கள் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. இந்த பென்சன் பணம் வழங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வங்கியின் மூலம் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படும். இந்த உயர்வாழ் சான்றிதழ் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். தற்போது உள்ள காலகட்டங்களில் வைரஸ் பரவல் காரணமாக மூத்த குடிமக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களுக்கான பென்சன் தொகையை வாங்கிக் கொள்வது கடினமான ஒன்றாக மாறியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு டெல்லி மாநில அரசு பென்சன்தாரர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பென்ஷன்தாரர்கள் தங்கள் பென்ஷன் தொகையை ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதனால் மாநிலத்திலுள்ள ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அந்த கோரிக்கை மீதான பரிசீலனையும் விரைந்து செய்யப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |