ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே இருக்கும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற 27ஆம் தேதி தங்களின் மகன் வீட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
அங்கு வந்து பார்த்தபொழுது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த பொழுது மூன்று பீரோக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 37 பவுன் நகையும் 40,000 பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அன்பழகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.