Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துநர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலி”…. காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு….!!!!!

ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் நாகமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் திருச்செந்தூரில் உள்ள வடக்கு ரத வீதியில் இருக்கும் இனிப்புக் கடையில் பண்டங்கள் வாங்க வந்த பொழுது கடை முன்பாக நான்கு பவுன் தங்க சங்கிலி கீழே இருந்திருக்கின்றது.

உடனடியாக அவர் அதை எடுத்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த தங்கச்சங்கிலி திருச்செந்தூர் சன்னதி தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருடையது என தெரிய வந்ததையடுத்து திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் அந்தச் சங்கிலியை அவரிடம் ஒப்படைத்தார். ராமலிங்கம் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தங்கச்சங்கிலியை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த நாகமுத்துவை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Categories

Tech |