ராணுவத்திற்கு ஆள் எடுப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவத்தில் வேலை. அதன்பிறகு கட்டாய பணி ஓய்வு பெற வேண்டும். ஆனால் அவர்களுக்கு பென்சன் கிடையாது. அதனால்தான் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் “ஒரே பதவி ஒரே பென்ஷன்” என்ற திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வுதியதாரர்களுக்கு பென்ஷன் நிலுவை தொகை வழங்குவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இதற்காக கூடுதல் ரூ.2000 கோடி தொகை மத்திய அரசு வழங்க உள்ளது. அடுத்த சில வாரங்களில் ராணுவ வீரர்கள் பென்ஷன் நிலுவைத் தொகை செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டத்திற்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் பென்ஷன் தொகை உயர்வு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்ற 5 ஆண்டுக்கு ஒரு முறை பென்ஷன் தொகையை உயர்த்தும் முடிவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் மத்திய அரசு பென்சன் தொகை உயர்த்தி நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியதாரர்களுக்கு மிக விரைவில் செலுத்தவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.