EPFO வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.அதன்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மொபைல் செயலி மூலமாக EPS, 95ஓய்வூதியதாரர்களின் டிஜிட்டல் லைப் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான face RDஎன்ற முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதுமை மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் முறைகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஓய்வூதியதாரர்களுக்கு மொபைல் போன்கள் மூலமாக DLC ஐ தாக்கல் செய்யும் செயல்முறையை எளிதாக்கும் நோக்கத்தில் இந்த புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது டி எல் சி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆதார் பேஸ் ஆர் டி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஜீவன் பிரம்மாண்ட் போர்ட்டலில் இருந்து பேஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் ஆபரேட்டரின் அங்கீகாரம் பெற வேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர் அங்கீகாரமும் தேவை.
அனுமதி வழங்கும் அதிகாரம், வழங்கும் நிறுவனம், ஆதார் மொபைல் மற்றும் பி பி ஓ எண் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் ஒப்புதல் பெற்றவுடன் வெற்றிகரமாக வாழ்க்கைச் சான்றிதழ் புதுப்பித்தல் மற்றும் நிராகரிக்கப்பட்டால் ஓய்வூதியதாரர்களுக்கு எஸ்எம்எஸ் வந்து சேரும்.