Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பென்ஷன் விதிமுறையில் புதிய மாற்றம்….. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெற்று பயன் அடைகிறார்கள். இந்த நிறுவனத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழ் வருடம் தோறும் நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழ் ஓய்வூதியம் பெரும் நபர் உயிருடன் தான் இருப்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. ஒருவேளை ஓய்வூதியம் பெறுபவர் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால் அவருக்கு பென்ஷன் வழங்கப்பட மாட்டாது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமானது ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஓய்வூதியதாரர்கள் ஒரு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்கு செல்லுபடி ஆகும். அதன்பின் சான்றிதழுக்கான காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாக அடுத்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து விட வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை பி பி ஓ நம்பர், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவற்றை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை பென்ஷன் பெரும் வங்கிகள், பொது சேவை மையங்கள், EPFO அலுவலகம், போஸ்ட் ஆபீஸ் மற்றும் செல்போனில் UMANG APP மூலமாக சமர்ப்பிக்கலாம்.

Categories

Tech |