இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இறுதிக்குள் வழங்கினால் மட்டுமே எவ்வித தடையும் இல்லாமல் பென்ஷன் வந்து சேரும். தற்போது வங்கி, தபால் அலுவலகம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களின் வீடுகளை சென்று சான்றிதழை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்குஅலையாமல் வீட்டிலிருந்து சமர்ப்பிக்க மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது. அவ்வகையில் ஜீவன் பிரமாண் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்க முடியும். இதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளத்தில் மூலமாக அல்லது Jeevan Pramaan என்ற செயலி மூலமாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதன் மூலமாக நாட்டில் தகுதியான நபர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.