இந்தியா முழுவதும் பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய ஆயுள் சான்றை வருகின்ற 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது குறித்து மே 14-ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில் 43,774 பயனாளர்கள் தங்களின் விவரங்களை இணைய வழி மூலம் அல்லது வங்கிகள் வழியாகவும் சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வருடாந்திர அடையாளச் சான்று சரிவர பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்த ஆவணங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.