Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இதை செய்யலன்னா உங்களுக்கு பென்ஷன் வராது…. உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!!

ஓய்வூதியதாரர்கள் அவர்களின் லைப் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் தங்களுடைய ஓய்வூதிய நிதியினைப் பயன்படுத்த இயலாது என கூறப்பட்டு உள்ளது. டிஜிட்டல் லைப் சான்றிதழை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் வங்கி (அ) திட்டத்தின் போர்ட்டலுக்குச் சென்றும் ஆன்லைன் மூலம் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பித்துக்கொள்ளலாம். ஓய்வூதியம் பெறக்கூடிய ஒவ்வொருவரும் வருடந்தோறும் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஆண்டு முடிந்தபின் அந்த சான்றிதழை சமர்பிக்காவிட்டால் ஓய்வூதியம் பெறுவதில் உங்களுக்கு சிக்கல்தான்.

இதன் காரணமாக உங்களின் டிஜிட்டல் லைப் சான்றிதழின் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.  லைப் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர்களுக்குரிய டிஜிட்டல் சான்றிதழ் ஆகும். இச்சான்றிதழில் ஆதார் அட்டையை போல் ஓய்வூதியதாரர்களின் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு இருக்கும். டிஜிட்டல் லைப் சான்றிதழை அடிப்படையாக வைத்துதான் மாதந்தோறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இது ஓய்வூதியதாரர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்குரிய சான்றாகும். லைப் சான்றிதழை உருவாக்கும்போது தவறான தகவலைக் கொடுத்தால், அது நிராகரிக்கப்படலாம். இந்த டிஜிட்டல் லைப் சான்றிதழை நீங்கள் ஆன்லைன் மூலம் பிடிஎப் வடிவில் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம். இவற்றிற்கு உங்களிடம் ஜீவன் பிரமானுக்கான ஆதார் எண் (அ) விஐடி இருத்தல் வேண்டும்.

மொபைலில் ஜீவன்பிரமான் செயலியை பதிவிறக்கம் செய்யும் வழிமுறை குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

# செயலியை பதிவிறக்க முதலாவதாக https://jeevanpramaan.gov.inக்குச் செல்லவும்.

# தற்போது மின் அஞ்சல் ஐடி, கேப்ட்சாவை உள்ளிட்டு டவுன்லோடு கோரிக்கையை ஏற்க வேண்டும்.

# பின் மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.

# OTP உள்ளிட்ட பின், டவுன்லோடு மொபைல் ஆப் என்பதை கிளிக் செய்யவும்.

# மின் அஞ்சலில் பெறப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் வாயிலாக apk ஃபைலை டவுன்லோடு செய்யலாம்.

Categories

Tech |