தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 3000 ரூபாயில் இருந்து 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.