Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா… தீர்மானங்கள் நிறைவேற்றம்… சங்கத் தலைவர் தலைமை..!!

சிவகங்கை காரைக்குடியில் ஓய்வூதியர்களுக்கான பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தாலுகாவில் காரைக்குடி வட்ட ஓய்வூதியர்களுக்கான பொதுக்குழுக்கூட்டம் மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் முத்து தலைமை தாங்கியுள்ளார். ஆண்டறிக்கையை செயலாளர் மோகன்தாஸ் வாசித்தார். அதன்பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 21 மாதங்களுக்கான நிலுவை தொகையை ஊதிய குழுவில் வழங்க வேண்டும். குடும்ப நல உதவி ரூ.50 ஆயிரத்தை ஓய்வூதியர் குடும்பங்களுக்கு கால தாமதம் இல்லாமல் விரைவில் வழங்க வேண்டும்.

பேருந்து மற்றும் ரயில்வே போக்குவரத்து கட்டணங்களில் 30 சதவீதம் சலுகை அளித்திட வேண்டும். அகவிலைப்படியை மூன்று தவணைகளாக இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு விருது பெற்ற ஹென்றி பாஸ்கர் மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சிறப்புரையாற்றியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து டாக்டர் திருப்பதி எடுத்துரைத்துள்ளார். நிர்வாகசபை உறுப்பினர் மைக்கேல் முடிவில் நன்றி கூறினார்.

Categories

Tech |