இரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் எஸ்.ஆர். எம்.யூ சார்பில் நடத்தப்பட்டது.
இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான இரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.