Categories
மாநில செய்திகள்

“ஓய்வூதிய பலன்கள் கிடையாது” யாருக்கு தெரியுமா….?? சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கனரா வங்கியில் 1984-ஆம் ஆண்டு எஸ்.குணசேகரன் என்பவர் எழுத்தராக பணியில் சேர்ந்துள்ளார். இவர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி பணியை துறந்தார். கடந்த 1995-ஆம் ஆண்டு கனரா வங்கி பென்ஷன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி முதல் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்காக அமல்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தில் தன்னையும் சேர்க்க வங்கிக்கு உத்தரவிட வலியுறுத்தி குணசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கினை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது கனரா வங்கி தரப்பில் “விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பணியை விட்டு சென்ற போது “சேமநல நிதி” திட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுத்ததால், பென்ஷன் திட்டத்தை அவருக்கு அமல்படுத்த முடியாது” என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்காக மட்டும் கனரா வங்கி பிறப்பித்த திட்டம் ராஜினாமா செய்தவருக்கு பொருந்தாது என கூறி நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மேலும் வங்கியின் நிலைப்பாடு சரி என கூறி குணசேகரனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

Categories

Tech |