மின்கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வந்தார். இவர் தினமும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜேக்கப் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பி உயர் மின் அழுத்தம் காரணமாக அறுந்துள்ளது. இதனை கவனிக்காமல் இருந்த ஜேக்கப்பின் மீது விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துவிட்டார் .
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜேக்கப்பின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . இச்சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மின்சாரத் துறையினரிடம் பராமரிப்பு பணியை முறையாக மேற்கொள்ளுங்கள் , இல்லையேல் இவ்வாறு உயிர் பலி நேரிடக் கூடும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.