அதிமுகவில் அதிகார மொதலானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸிற்கு இடையே வலுப்பெற்று வருகின்றது என்ற தகவல் வந்துள்ளது.
அதிமுகவானது மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க் கட்சியாக உள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எடப்பாடியின் கையே உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவியில் இருந்தாலும் கழக செயல்களில் அவர் தனித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஓபிஎஸ் இடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலின் வெற்றியோ, தோல்வியோ அதற்கு காரணம் இபிஎஸ் தான் காரணமாக இருக்க வேண்டும்.
மேலும் மக்கள் மத்தியில் தனது முகத்தை எப்பொழுதும் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் ஈபிஎஸ். ஓபிஎஸ் வீட்டில் துக்க சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ஓரிரு வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு வருமாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவரை எந்தவித நிகழ்விலும் கலந்து கொள்ள விடவில்லையாம். இவ்வாறு அதிமுகவில் தொடர்ந்து அதிகார மோதலானது நடைபெற்று வரும் நிலையில் எப்பொழுது இந்த மோதலானது பூகம்பகமாக மாறி வெடிக்கும் என்று தெரியவில்லை என இரு தரப்பினருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.