Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரினசேர்க்கையாளரை நிர்வாணமாக்கிய வாலிபர்கள்…. வீடியோ எடுத்து மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஓரினசேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாரணி நகரில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான கங்காதரன் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செயலியில் உறுப்பினராக இருக்கும் வாலிபர் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வாலிபர் சாய்பாபா காலனி தனியார் மருத்துவமனை பின்புறம் இருக்கும் ரயில்வே தண்டவாள பகுதிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபர் கூறிய இடத்திற்கு கங்காதரன் சென்றுள்ளார். அப்போது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கங்காதரனின் ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என அந்த வாலிபர்கள் மிரட்டியுள்ளனர். அதன்பின் கங்காதரனின் செல்போனை பறித்து விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கங்காதரன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் கல்லூரி மாணவர்களான மாணிக்கம், பிரசாந்த் மற்றும் நிஷாந்த் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரஷாந்த் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மாணிக்கத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |