Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த நபர் கொடூர கொலை…. 2 வாலிபர்களின் வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வண்ணாம்பாறைபட்டி கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சுற்றி திரிந்தார். இவர் அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடலில் பல்வேறு இடங்களில் பாட்டிலால் குத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள்(22), பசுபதி(19) ஆகிய இரண்டு பேரும் கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபனிடம் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு வாலிபர்களும் மது குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றபோது அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கம்பால் தாக்கியும், மது பாட்டிலால் குத்தியும் அவரை கொலை செய்து உடலை குடிநீர் தொட்டியில் வீசிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |