திருவெற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் அறிவிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ அன்பரசன் சென்னையில் 40 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கடந்த ஆட்சியாளருக்கு இல்லை.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னையில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் வாழ்வதற்கு தகுதி இல்லாத 23 ஆயிரம் வீடுகள் இருக்கிறது என்பதை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த இருபத்தி நான்கு வீடுகளுக்கு பதில் அடுத்த மூன்று வருடங்களில் புதிய வீடுகளை கட்டி தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி இன்று மாலைக்குள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். வீடுகளை இழந்த 24 குடும்பங்களுக்கு மாற்று இடங்களில் ஓரிரு நாட்களில் வீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.