செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாநகராட்சி மூலமாக 580 இடங்களில் மோட்டார் வைத்து மெட்ரோ வாட்டர், மாநகராட்சி இணைந்து நீர் அகற்றுகின்ற பணியை மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவுப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைய இடங்களிலே தண்ணீர் வடியாமல் இன்னுமும் பள்ளமாக இருக்கின்ற இடங்களிலே தண்ணீரை உறிஞ்சாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று உத்தரவு கொடுத்து விட்டார்கள்.
எனவே ஒருநாள்மழை இல்லை என்றால் ஓரிரு நாட்களில் சுத்தமாக தண்ணீர் இருக்காது. அந்த நடவடிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், உள்ளூரில் இருக்கின்ற அமைச்சர் அவர்களும், அறநிலையத் துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும், எம்.பி எல்லாரும் வந்து செய்து வருகின்றார்கள். மாநகராட்சி மூலமாக நாளொன்றுக்கு ஒரு வேளைக்கு 2 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. அதோடு மருத்துவ முகாம்கள் தனியார் மூலமாகவும், மாநகராட்சி மூலமாகவும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் அவர்கள் அம்மா உணவகம் சென்று அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வளவு தூரம் அரசு சார்பில் உதவ முடியுமோ, அவ்வளவு உதவி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கிறார்கள்.தியாகராய நகர் பகுதியில் தண்ணீர் எப்போதும் தேங்கி நிற்காது. இப்போது தேங்கி நிற்பது, இந்த வருடம் வந்திருக்கிறது.
எனவே அதை தலைவர் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் சாலைகளையும், வாய்க்கால்களையும், அனைத்தும் தூர்வார வேண்டும் என்று கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கி தந்தார்கள். அந்த நிதி ஒதுக்கீடு சாலை மட்டும் போட்டுவிட்டு, நம்முடைய மாம்பழம் இருக்கின்ற வாய்க்காலை தூர் வாராமல் சென்று விட்டார்கள்.
பாதி தூர்வாரி தூர் வாராமல் இருக்கின்ற காரணத்தினால்தான் அந்த நீர் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி ஆணையாளர் பொறியாளர் சென்று எந்த இடத்தில் தண்ணீர் வடியும் அந்த இடத்தை உடைத்து தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. எனவே இது போல் இருக்கின்ற முறைகேடுகளை தான் தலைவர் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று அறிக்கை கொடுத்து இருந்தார்கள், முதலமைச்சர் சொல்லிட்டார் அப்புறம் என்ன ?
உணவு தயார் பண்ணிட்டோம், இருக்குற இடம் தயார் பண்ணிட்டோம், மக்களுக்கு பாதிக்காத அளவிற்கு எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு உரிய மோட்டார்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே எவ்வளவு பாதிப்பு வந்தாலும் இந்த அரசு எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.