சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இறுதி கட்ட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துறை அதிகாரிகளுடன் இன்று பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயம்பேடு மேம்பாலத்தை தீபாவளிக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்று இரவு பகலாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில நாட்களில் பாலத்தின் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும். இந்தப் பாலம் ரூ.93.5 கோடியில் 1கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டு 1, 25,000 ஆயிரம் வாகனங்கள் இந்த வழியாகச் செல்ல முடியும்.
அதனைத் தொடர்ந்து வேளச்சேரி பாலமும் விரைவில் திறக்கப்படும். இதையெடுத்து ஓ.எம். ஆரில் மத்திய கைலாஷ் மேம்பாலத்தை அமைக்க 2006-2011 அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதை நிறைவேற்றவில்லை. இதனால் ஓஎம்ஆரில் 4 பாலங்களை அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மத்திய கைலாஷ் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு கலாச்சாரம் படங்கள் இடம்பெற உள்ளது.
எப்போதுமே பாலம் கட்டுவது திமுக ஆட்சியில் தான். தென் மாநிலத்தில் முதல் முறையாக பாலம் கட்டியது கருணாநிதி 10 க்கும் மேற்பட்ட பாலத்தை மேயராக இருந்தபோது ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கோயம்பேடு மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒருவர் இந்த இடத்தை ஆக்கிரமித்து வழக்கு தொடர்ந்து 10 நாட்களுக்கு முன்பு அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.