Categories
மாநில செய்திகள்

ஓரிரு மணி நேரத்தில்… மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் திருவாரூர், வேலூர், கடலூர், நாகை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் கனமழை, சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாகை, திருவாரூர், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |