கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு ஜெய் மிருத்திகா என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ராணித் தோட்டம் பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வழித்தடம் 36N என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் 6 முதல் 8 இஞ்ச் வரை ஓட்டை உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் சிறு குழந்தைகள் செல்வதற்கு அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே இதுபோன்ற பழுதுகள் இருந்தால் அசம்பாவிதம் ஏதாவது நடக்கக் கூடும். அதற்கு முன்பாக சரி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.
இதனையடுத்து இந்த 4 ஆம் வகுப்பு மாணவி கடிதத்தை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர். அரசு பேருந்துகள் சாமானியர்களுக்கு பயன்படுத்தக் கூடிய பொது போக்குவரத்து. அதில் குறைகளற்ற நிலை இருந்தால் தான் அனைவரது பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆனால் இப்படி ஓட்டை உடைசல் ஆக இருந்தால் ஆபத்து ஏற்பட தான் செய்யும். இது போன்ற நிலையை தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு கொண்டுவர வேண்டும். மேலும் பல்வேறு சலுகைகளை வழங்க முன்வரும் தமிழக அரசு, அவை தரமானதாக இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.