இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் அதிகமாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதற்காக ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகள் அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவைப் போன்று தமிழகத்திலும் வாடகை வாகனங்களை அரசே இயக்க யோசனை உள்ளது. மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டமாக இது இருந்தால் இந்த திட்டத்தை நிச்சயம் செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.