Categories
உலகசெய்திகள்

“ஓவரா பேசுனா வோவோ அங்கிளை கூப்பிடுவேன்”…. புதினை விமர்சித்த பெண்…. லாஸ்ட்டா என்னாச்சுனு தெரியுமா?….!!

ரஷ்ய ஜனாதிபதி புடினை ஃபேஸ்புக்கில் விமர்சித்த கஜகஸ்தான் நாட்டிலுள்ள வானொலி நிலையத்தில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர் ஒருவரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

கஜகஸ்தான் நாட்டில் இயங்கிவரும் வானொலி நிலையம் ஒன்றில் லியூ பனோவா என்ற பெண்மணி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதினை கமெண்ட் அடித்துள்ளார். அதாவது “ஓவராக பேசினால் வோவோ அங்கிளை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

இவர் வோவோ அங்கிள் என்று குறிப்பிட்டது ரஷ்ய அதிபர் புதினை ஆகும். இந்நிலையில் பனோவை வானொலி நிலையம் மறுநாளே பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியதாவது, அவரது பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |