முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அப்போது அவர் நாகர்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியே ஒரு மாணவியும் மாணவனும் நின்று கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்த மு.க ஸ்டாலின் தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அந்த மாணவர்களிடம் நீங்கள் யார் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி எனது பெயர் அப்ரின் ஜெசிக்கா என்றும் அருகிலிருப்பவர் என்னுடைய சகோதரர் ஜெர்சோன் ரிச் சாம் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் தாங்கள் வரைந்த ஓவியங்களை முதலமைச்சரிடம் காண்பித்துள்ளனர். அந்த ஓவியத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வரைபடமும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் வரைபடமும் இருந்தது. இதைபார்த்த மு.க ஸ்டாலின் அவர்கள் ஓவியம் மிகவும் நன்றாக இருக்கின்றது என மாணவர்களை வாழ்த்தினார். அதன்பிறகு அந்த 2 ஓவியங்களையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாங்கி தனது காரில் வைத்துள்ளார். இதனையடுத்து மாணவர்கள் தங்களது பெற்றோருடன் சேர்ந்து முதலமைச்சருடன் செல்பி எடுத்துள்ளனர். அதன்பிறகு மு.க ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.