பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. இளையராஜாவின் திராவிட பெண்கள் ஓவியங்கள் புகழ் பெற்றவை. கிராமத்து பெண்களை மிக தத்ரூபமாக வரைவதில் சிறந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே படத்தில் சிறுவயது பார்த்திபன் ஆகவும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஓவியர் இளையராஜா மறைவுக்கு இயக்குனர் ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். பேரன்புமிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல் என டுவிட் செய்துள்ளார்.