நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இப்போ கொலைகள் அதிகம் நடக்கிறது இதையெல்லாம் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 600 க்கு மேல வந்துடுச்சி, ஒரு வருஷத்துக்குள்ள. இதுல பாதிக்கு மேல சென்னை நகரத்தில் தான். அதுக்கு முக்கிய காரணம் இந்த கிரேட்டஸ்ட் சென்னை… சென்னை விரிவாக்கம் அப்படிங்கிறத அம்மாதான் கொண்டு வந்தாங்க….. அதேசமயம் கமிஷ்னர் ஒருத்தர் தான்…..
இப்போ என்ன ஆகி இருக்கு. மூன்றாக பிரித்து இருக்காங்க. 3 ஆக பிரிக்கும் போது அதிகார மையம் தனித்தனியாக இருக்கும். இப்போ ஒரு இடத்தில தவறு செய்த ஒரு குற்றவாளி…. சிட்டியை பொருத்தவரை உங்களுக்கு தெரியும்…. ரொம்ப டிஸ்டன்ஸ், தொலைதூரம் இல்ல….
ஒரு இடத்துல தப்பு செஞ்சா அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷன்ல தான் வழக்கு பதிவாகி இருக்கும். ஆனா அவங்க என்ன பண்ணுவாங்க இந்த குற்றம் செஞ்சவுங்க அடுத்த பகுதிக்கு சென்று தங்கி விடுவார்கள். இது நடைமுறையில் இப்போ நடந்துட்டு இருக்கு. அது ஒரு முக்கிய காரணம் குற்றம் ரொம்ப அதிகமா நடக்கிறதுக்கு. எப்போதுமே வந்து கமிஷனர் ஒருவரை வைத்து, துணை கமிஷனரை அதிகப்படுத்தி…. இந்த மாதிரி போஸ்ட் அதிகப்படுத்தி இருந்தால் இந்த தவறுகள் இந்த அளவுக்கு வராது என்கிறது என்னுடைய கணிப்பு என தெரிவித்தார்.
காவல் துறையின் செயல்பாடுகள் நிச்சயமாக சரியில்லை. சென்னையை பிரிச்சது குற்ற செயலுக்கு ரொம்ப ஈசியா போயிட்டு. சென்னை ஒரே தலைமையின் கீழ்…. ஒரே கமிஷனர் இருந்தால்தான்….. சென்னை விரிவாக்கத்தில் இருக்கிற காவல் நிலையங்கள் அனைத்தும் ஒருத்தர் கட்டுப்பாட்டில் வரும். அப்படி இருக்கும்போது தான் நீங்க வந்து குற்றவாளியை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும். எந்த செயலையும் விரைவாக செய்ய முடியும் என தெரிவித்தார்.