Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓஹோ கதை அப்படி போகுதா?…. “காதல் வேலையில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா!”…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஹைதராபாத்தில் உள்ளனர். அங்கு ராமோஜிராவ் ஸ்டூடியோஸில் உள்ள சித்தாரா என்ற ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அதாவது ஐஸ்வர்யா காதல் பாடல் ஒன்றை இயக்குவதால் தற்போது ஹைதராபாத்தில் உள்ளார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா அந்த பாடல் குறித்து தன் குழுவினருடன் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா பிரிவை நினைத்து அழாமல் அடுத்தகட்ட முயற்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CZCVAc9sSDS/?utm_medium=copy_link

அதேசமயம் ரஜினி ரசிகர்கள் லிங்கா மற்றும் யாத்ராவுக்காக பிரிவு முடிவை கைவிட வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐஸ்வர்யா திரையில் காதலை அழகாக காட்டுவதில் வல்லவர். அவர் தனுஷை வைத்து இயக்கிய மூன்று படங்களை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.

இதற்கிடையே கஸ்தூரி ராஜா ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரியவில்லை அது ஒரு குடும்ப தகராறு மட்டுமே என்று கூறியுள்ளார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனுஷ் பெயரை தனது சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து நீக்கவில்லை. எனவே ஐஸ்வர்யாவும், தனுஷும் மீண்டும் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |