Categories
அரசியல்

“ஓஹோ நீங்க எல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா…!!” கட்சி தலைமை எடுத்த அதிரடி முடிவு….!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கியமான கட்சிகளில் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி வாசலில் வந்து வந்தனர். இந்நிலையில் போட்டியை சமாளிப்பதற்காக கட்சித் தலைமை நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது. இந்த நேர்காணலில் வேட்பாளர்கள் லட்சம் கோடி என தாங்கள் செலவு செய்யும் தொகை குறித்து கூறியிருந்தனர். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த தலைமை அதிகமாக செலவு செய்யும் சிலரை தேர்வு செய்துவிட்டு பலரை நிராகரித்தது.
இதில் நிராகரிக்கப்பட்ட சிலர் “எனக்கா சீட் இல்லை என்று சொல்கிறீர்கள்.!” என கோபத்தில் கொந்தளித்து சுயேச்சையாக தேர்தலில் களமிறங்கினார்.

இப்படி தன்னுடைய கூட்டணி கட்சிகளை எதிர்த்து தனியாக களம் கண்ட பலரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.சென்னை திருவொற்றியூர், செங்குன்றம், மதுரவாயல், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், தாம்பரம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திருப்பூர், தருமபுரி -பென்னாகரம், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுயேச்சையாக தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்த வேட்பாளர்கள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |