தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளார். புதிய படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியது, தற்போது போதை பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகிறது. முற்றிலும் தடுக்க தான் எல்லாரும் முயற்சி செய்கிறோம் என்னுடைய படத்தில் புதைப்பொருட்கள் கொடுத்து கூறுவதின் காரணமும் இதுதான். அதனை தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். இதனால் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என்பது தான் எனது நம்பிக்கை. அதற்காக தான் என் படங்களில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.