தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது ‘சினம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி படத்தின் ஹீரோ அருண் விஜய், நாயகி பல்லக் லவ்வாணி, நடிகர் காளி வெங்கட் ஆகியோர் சேலத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது சேலம் தனியார் நட்சத்திரம் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பேசி அருண், திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமான போலீஸ் அதிகாரியாக தான் நடித்து உள்ளேன்.
தனது முந்தைய திரைப்படமான யானைக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு போல இந்த திரைப்படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஹீரோவாக நடிப்பதன் மூலம் சமூகத்திற்கு நல்ல தகவல்களை கொடுக்க முடிகிறது. அதனால் தான் வில்லனாக நடிப்பதை தவிர்த்து வருகிறேன். அதனைதொடர்ந்து விட்டர் போன்ற நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட முடியாத அளவுக்கு தொழில்நுட்பங்கள் தேவை. ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த ஜாலியான திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் மணிரத்தினம், கௌதம், வாசுதேவி இயக்கத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.