ராணி இரண்டாம் எலிசபெத் கமீலாவின் முதல் திருமணத்திற்கு நாய் குட்டியை பரிசாக அளித்துள்ளார்.
பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடி சூடிக்கொண்டார். இந்நிலையில் பிரித்தானிய மன்னரின் மனைவியான கமீலா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது பலருக்கு தெரிந்தது. இந்நிலையில் கமீலா மற்றும் சார்லஸ் இருவருக்கும் இடையிலான உறவு குழப்பம் மிக்க ஒன்றாகவே திகழ்ந்தது. ஏனென்றால் முதலில் இருவரும் பழகி இருக்கிறார்கள். ஆனால் கமீலா சார்லசை விட்டுவிட்டு ஆண்ட்ரூ பார்க்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து இருவரும் தனித்தனியே திருமணமான பின் மீண்டும் சார்லசுக்கும், கமீலாவுக்கும் காதல் முளைத்திருக்கிறது. அது ரகசியமாக தொடர, ஒரு நாள் ரகசியம் வெளியாக ராஜ குடும்பத்தில் பூகம்பம் வெடித்துள்ளது. மேலும் டயானா உயிரிழந்தால் மீண்டும் சார்லசும் கமீலாவும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வேடிக்கை கதையில் டயானா என்னும் உயிர் பலியானது. அந்த சோகம் அவரது பிள்ளைகள் மனதில் ஆறாதக்காயமாக பதிந்து விட்டதை மறுக்க முடியாது.
இந்நிலையில் கமீலா ஆண்ட்ரூவைத் திருமணம் செய்த போது இவர்களுக்கு தனது மனதுக்கு நெருக்கமான நாய்க்குட்டி ஒன்றை மகாராணி இரண்டாம் எலிசபெத் பரிசளித்துள்ளார். இந்த நாய்க்குட்டி ஆண்ட்ரூவுக்கு மிகவும் பிடித்தமானதாம் . ஆனால் கடந்த 1995 -ஆம் ஆண்டு ஆண்ட்ரூவும் கமீலாவும் பிரிந்து விட்டார்கள். இவர்கள் பிரிந்தும் மகாராணியர் அவர்களுக்கு பரிசாக கொடுத்த 2-வது நாய்க்குட்டி மகாராணியாரிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தம்பதியாக இருந்தவர்களுக்கு நான் பரிசாக கொடுத்த நாய்க்குட்டி அவர்கள் பிரிந்ததால் திருப்பிக் கொடுக்கப்பட்டது மகாராணியாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.