பிரபல 2 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வரம்புகளை தீர்மானிக்கவும், ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கொரோனா தொற்றினால் நிறுத்தி வைக்கப்பட்ட பேச்சு வார்த்தை மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தம் தொடர்பாக இருநாட்டு குழுக்களுக்கும் இடையே நேருக்கு நேர் சந்திப்பு நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என அவர் கூறினார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ரஷியா மற்றும் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்திருக்கும் சிலர் முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க ஒப்பந்தங்களில் ஒன்றாகும் என கருதப்படுகிறது.