இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் ஊழலை குறைப்பதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 9-ஆம் ஊழல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ஊழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் வடகொரிய அரசால் நடத்தப்படும் எஸ்.இ.கே. என்கின்ற அனிமோஷன் ஸ்டுடியோ தொழிலாளர்களுக்கு குறைந்த வருமானத்தை வழங்கி அதிகமான வேலையை வழங்குகிறது என அமெரிக்கா பல்வேறு குற்றங்களை சாட்டியது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவு வழங்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
அதில் இந்தியாவை சேர்ந்த தனியார் அனிமேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் சுபாஷ் ஜாதவ் வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு பணம் வழங்கியதாக கூறி அவர் மீது பொருளாதார தடை விதித்திருக்கிறது. அதேபோல் சீனா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 7 பேர் மீதும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.