உலகின் மிகச்சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உலகில் உள்ள நாடுகளில் எந்த நாடு சிறந்தது என்பது பற்றி வருடாந்திர அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் us news கடந்த 27-ஆம் தேதி சிறந்த நாடுகளின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகின் சிறந்த நாடுகளாக வரிசைப்படுத்த வாழ்க்கை தரம், சக்தி, கலாச்சாரம், செல்வாக்கு, பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு சிறந்த நாடுகளுக்கான வரிசையில் கனடா முதலிடத்தை பிடித்தது. ஆனால் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் வாழ்க்கை தரம், சுற்றுலா, படித்த மக்கள் தொகை மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட சுவீட்சர்லாந்து இப்போது மொத்த போட்டியாளர்களில் 87 பேரில் ஒட்டுமொத்தமாக சிறந்த நாடு என்ற பட்டத்தை பெற்றுள்ளது. இதனையடுத்து ஜெர்மனி இரண்டாவது இடத்தையும், கர்நாடகா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஏனென்றால் வாழ்க்கைக்கு தரம் மற்றும் மாற்றத்திற்கு ஏற்ற நாடு போன்ற தனிப்பட்ட குணாதிசயங்களுக்காக கனடா ஒட்டுமொத்த உயர்ந்த இடத்தை பெற்றிருந்தாலும், மற்ற பகுதிகளில் அது குறைவாகவே தான் இருக்கிறது. உதாரணம், கலாச்சாரத்துடன் வரலாற்றை வடிவமைத்துள்ள இத்தாலி, கிரீஸ் ஸ்பெயின், மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற போட்டியாளர்களை விட பின்தங்கி பாரம்பரியம் என்று வரும்போது கனடா 28 -வது இடத்தில் வந்தது. அதேபோல் கனடா அதன் கலாச்சார செல்வாக்கு என்று வரும்போது குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது. மேலும் சாகசம் என்ற வகையில் கனடா பின்தங்கியுள்ளது. அதன் நட்பு மற்றும் இயற்கை காட்சியின் கீழ் நியமனமான முறையில் மதிப்பிடப்பட்டாலும், கனடாவின் காலநிலை 100-க்கு 23.4 மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமான கவர்ச்சி கரம் sexiness 100-க்கு 3.5 என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த சிறந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா நான்காவது இடத்திலும், ஸ்வீட்ன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளது.